என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » தண்ணீர் நிறுத்தம்
நீங்கள் தேடியது "தண்ணீர் நிறுத்தம்"
மழை காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.
வீராணம் ஏரியின் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கல்லணையில் இருந்த கடந்த 30-ந் தேதி கீழணைக்கு முறைப்பாசன தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதை யடுத்து அன்று வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. பாசனத்துக்கும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. சென்னை குடிநீருக்காவும் நீர் அனுப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி ஏரியில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மழை காரணமாக ஏரியின் பாதுகாப்பு கருதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவது நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை வீராணம் ஏரியின் நீர்மட்டம் 45.50 அடியாக உள்ளது. ஏரிக்கு 548 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர்ந்து சென்னைக்கு 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஊத்துக்கோட்டை:
பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இதில் பூண்டி ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
புழல் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வட சென்னையிலும், செம்பரம்பாக்கம் ஏரியில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி கடந்த டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மார்ச் 26-ந் தேதி நிறுத்தப்பட்டது. இந்த இடைபட்ட நாட்களில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. கண்டலேறு தண்ணீர் வரத்து காரணமாக பிப்ரவரி 27-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து லிங்க் கால்வாய் மூலம் புழல் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
புழல் ஏரியில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்ததால் கடந்த மாதம் 20-ந் தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக 550 கனஅடி வீதம் திறந்து விடப்பட்டது.
பூண்டி ஏரியின் நீர் மட்டம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். கோடை வெயில் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வேகமாக குறைந்தது. நேற்று தண்ணீர் மட்டம் 19.30 அடிக்கு குறைந்து விட்டது. இதன் காரணமாக நேற்று இரவு முதல் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம் பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பூண்டி ஏரியில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வெறும் 191 மில்லியன் கனஅடி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் மூலம் வினாடிக்கு 19 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
×

X